சீன எதிர்ப்பு மனநிலை உண்மையா? – ஆன்லைன் விற்பனை திருவிழாவில் சீன தயாரிப்புகளை அதிகம் விரும்பிய இந்தியர்கள்?

Must read

புதுடெல்லி: இந்தியா – சீனா எல்லைப் பிரச்சினையை ஒட்டி, சீன தயாரிப்புகளுக்கு எதிரான மனநிலை இந்தியாவில் உருவாகிறது என்ற ஒரு கருத்து உருவாகியிருந்தாலும், இந்திய ஆன்லைன் விற்பனை திருவிழாவில், சீன தயாரிப்பு பொருட்களே ஆதிக்கம் செலுத்தின.

இதன்மூலம், இந்நாட்டில் செயலைவிட, பேச்சுதான் பெரிதாக இருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற புகழ்பெற்ற ஆன்லைன் விற்பனை தளங்களில், ரெட்மி என்ற சீன தயாரிப்பே பெரியளவில் உலா வந்தது. இதுதவிர, ஓப்போ, வீவோ, ஒன்பிளஸ் மற்றும் ஐக்யூஓஓ உள்ளிட்ட சீன தயாரிப்புகளும் அதிக வரவேற்பை பெற்ற பொருட்களாய் உலா வந்தன.

இந்த ஆன்லைன் விற்பனை திருவிழாவானது, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் நடத்தப்படவுள்ள ஆன்லைன் விற்பனை திருவிழாவின் முதல் சீரிஸ் இது என்று கூறப்படுகிறது.

எல்லைப் பிரச்சினையை அடுத்து, சீன தயாரிப்புகளுக்கு எதிரான பிரச்சாரம் இந்தியாவில் சில பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது. காசு கொடுத்து வாங்கிய சீன தயாரிப்புகளை உடைக்கவும் செய்தனர்! மேலும், மொத்தம் 59 சீன செயலிகளுக்கும் மோடி அரசு தடைவிதித்தது.

நிலைமை இப்படியெல்லாம் போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஆன்லைன் விற்பனை திருவிழாவில், சீனப் பொருட்களுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம் வேறுவிதமான விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

More articles

Latest article