டெல்லி: ஆலங்கட்டி மழையால் நடுவாணில்  விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், அந்த இண்டிகோ விமானத்தை  அவசரமாக தரையிறக்க  விமானி அருகே இருந்த  விமான நிலையமான பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் விமானத்தை இறக்க அனுமதி கோரிய நிலையில், அதற்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.

இது பாகிஸ்தானின் மனிதாபிமானமற்ற கோர முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தி உள்ளது. அவசர தேவைக்காக பாகிஸ்தான் வான்வெளியை   சிறிது நேரம் பயன்படுத்த விமானி லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அனுமதியைக் கோரிய நிலையில், அவரது  கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உயிரை பாதுகாக்கும் வகையில், விமானி விடுத்த வேண்டு கோளை ஏற்க பாகிஸ்தான் வான் பாதுகாப்பு நிர்வாகம் மனிதாபிமானமற்ற செயல்  இந்தியா உள்பட உலக நாடுகளிடையேயும், மக்களிடையேயும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் இருந்து  227 பயணிகளுடன் காஷ்மீருக்குச் சென்ற இண்டிகோ விமானம் திடீரென நேற்று முன்தினம் பிற்பகல் ஆலங்கட்டி மழையில் சிக்கிக் கொண்டது. இதனால் விமானத்தின் முன்பகுதி மிகக் கடுமையாகச் சேதம் அடைந்து, விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே  பயங்கரமாகக் குலுங்கியது.  இதனால், அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர்.  இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பொதுவான வானிலை மோசமாக இருந்தால் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய தினம், திடீரென வானிலையில்  ஏற்பட்ட மாற்றத்தால் காஷ்மீர் சென்றுகொண்டிருந்த  6E2142  இண்டிகோ விமானம், அப்போது பெய்த ஆலங்கட்டி மழையில் சிக்கியது.  இதனால் நடுவானில் கடுமையான டர்புலன்ஸில் (turbulence) சிக்கி பயங்கரமாகக் குலுங்கியது. இதனால் அதில் பயணம் செய்த  பயணிகள் பீதியடைந்தனர். இந்த திடீர் டர்புலன்ஸ் காரணமாக விமானத்தின் முன்பகுதியும் சேதம் அடைந்தது

இந்த அதிர்ச்சி சம்பவம் கடந்த மே 22ந்தேதி  புதன்கிழமை மாலை.  இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட விமானி, அவசர நிலையை அறிவித்தார். இதையடுத்து இண்டிகோ விமானம் மாலை 6.30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகள் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும் டர்புலன்ஸில் சிக்கிக் குலுங்கியதில் அவர்கள் ரொம்பவே பயந்து போய் இருந்தனர் என்பது அவர்களின் பேட்டிகள்  மற்றும் வீடியோக்கள் மூலம் தெரிய வந்துள்ளது.  அதில்,   பயணிகள் அலறி கத்துவதையும் கேட்க முடிகிறது. பலரும் கீழே விழுந்து விடாமல் இருக்க தங்கள் சீட்டின் முன்பக்கத்தை இறுக்கிப் பிடித்தபடி இருப்பதும் அதில் தெரிகிறது. விமானம் இந்தளவுக்குக் குலுங்கினாலும், அதில் இருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் காரணமாக உள்ளே யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. விமானம் தரையிறங்கிய பிறகு அனைத்து பயணிகளும் விமானக் குழுவினரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் அதிகாரி கூறுகையில், “டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்குச் செல்லும் வழியில் இண்டிகோ விமானம் 6E2142 மோசமான வானிலை, அதாவது ஆலங்கட்டி மழையில் சிக்கிக் கொண்டது. இதனால் விமானி அவசரநிலையை அறிவித்தார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் உட்பட அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்” என்றார்.

இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் 6E 2142 திடீர் ஆலங்கட்டி மழையில் சிக்கியது. இதையடுத்து விமான குழுவினர் தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றினர். மேலும் விமானம் ஸ்ரீநகரில் தரையிறங்கிய உடனே பயணிகள் நல்ல நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. விமானம் தேவையான ரிப்பேர் மற்றும் ஆய்வுக்கு பிறகே பயணங்களைத் தொடரும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடுவாணில் ஏற்பட்ட டர்புலன்சில் சிக்கிய அந்த இண்டிகோ விமானத்தை உடனே தலையிறக்கும் முயற்சியில், அதை இயக்கிய விமானி,  அருகே இருந்த விமான நிலையமான பாகிஸ்தானிடம்  விமானத்தை தரையிறக்க  அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

அதாவது விமானம் அமிர்தசரஸில் பறந்து கொண்டிருந்தபோது, ​​மழையால் ஏற்பட்ட கொந்தளிப்பைக் கவனித்த விமானி, அவசர தேவைக்காக பாகிஸ்தான் வான்வெளி வழியாக  செல்ல  லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ATC) அனுமதியைக் கோரினார். கொந்தளிப்பைத் தவிர்ப்பதற்காக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் லாகூர் விமான போக்குவரத்து ஆணையத்தால் அது நிராகரிக்கப்பட்டது இது இந்தியர்களிடையே அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 ஸ்ரீநகர் விமானம் நேற்று முன்தினம்  எதிர்கொண்ட அவசர சூழ்நிலையில் ஆலங்கட்டி மழை/கொந்தளிப்பைத் தவிர்க்க தனது வான்வெளியைப் பயன்படுத்த இண்டிகோ விமானியின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்தது. 227 பயணிகளின் உயிர்கள் ஆபத்தில் இருந்தன. அனால்,  பாகிஸ்தான அவசர தேவைக்காக பாகிஸ்தான் வான்வெளியை   சிறிது நேரம் பயன்படுத்த விமானி லாகூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் அனுமதியைக் கோரினார், ஆனால் அவரது  கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  6E 2142 விமானம் கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்ட சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விசாரித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த விமானத்தில்,  திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரெக் ஓ’பிரையன், நதிமுல் ஹக், சாகரிகா கோஷ், மனாஸ் பூனியா மற்றும் மம்தா தாக்கூர் ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் குழு  உட்பட 220 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில்,  விமானம் புதன்கிழமை பாதுகாப்பாக தரையிறங்கியது.  விமானம் வந்த பிறகு விமான நிலையக் குழு வாடிக்கையாளர்களின் நல்வாழ்வு மற்றும் வசதிக்கு முன்னுரிமை அளித்து அவர்களைப் பராமரித்தது. தேவையான ஆய்வு மற்றும் பராமரிப்புக்குப் பிறகு விமானம் விடுவிக்கப்படும்” என்று அது கூறியிருந்தது.

இந்த சம்பவம் -குறித்து கூறிய விமான பயணிகள்,  “இது ஒரு மரண அனுபவம். என் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்தேன். மக்கள் அலறினர், பிரார்த்தனை செய்தனர், பீதியடைந்தனர்,” என்று  தெரிவித்தனர்.

மேலும் சிலர், இந்த பயங்கரமான சூழ்நிலையை   கடந்து எங்களை அழைத்துச் சென்ற விமானிக்கு வணக்கம். நாங்கள் தரையிறங்கியபோது, ​​விமானத்தின் மூக்கு வெடித்ததைக் கண்டோம்,” என்று அவர் கூறியிருந்தார், மேலும் தரையிறங்கிய பிறகு தூதுக்குழு விமானிக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறினார்.

விமானம் அசைந்தபோது பீதியடைந்த பயணிகள் தங்கள் உயிருக்காக பிரார்த்தனை செய்வதைக் காட்டும் கொந்தளிப்பான தருணங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.