கடந்த 2017ம் ஆண்டு நவம்பரில் வருமான வரித்துறை சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. ஒரே நேரத்தில் தமிழகம் புதுச்சேரி மற்றும் சென்னை, திருவாரூர், மன்னார்குடி, தஞ்சை, புதுக்கோட்டை, கோடநாடு, புதுச்சேரி ஆரோவில் உள்பட சுமார் 187 இடங்களில் 1200 அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 5 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த சோதனையைத் தொடர்ந்து, பல சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ந்தேதி, , சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1600 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி திருத்த சட்டம் 20017ன்கீழ் நீதிமன்றம் மூலம் வருமான வரித்துறையினர் முடக்கினர்.
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் அவரது பினாமி பெயர்களில் இருந்து, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான, 65 சொத்துக்களை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கியது. போயஸ் தோட்டம் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த பங்களா உள்பட பல சொத்துகளை வருமான வரித் துறை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது
இந்த நிலையில், மேலும் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சசியின் மேலும் ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்
ஜெயலலிதா உடன்பிறவா தோழி என அறியப்பட்ட, சசிகலா தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக சேர்த்த சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டு வரு கிறது. ஜெ.மறைவுக்கு பிறகு ஆட்சியை கைப்பற்ற நினைத்த சசிகலா இன்று பெங்களூரு சிறையின் கம்பிகளை கைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறார். விரைவில் சிறையில் இருந்து விடுதலையாகி, தமிழக அரசியலை கலக்கப்போகிறார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், வருமான வரித்துறை அடித்தடுத்து, அவரது சொத்துக்களை முடக்கி அடிமேல்அடி வைத்துக்கொண்டிருகிறது.