முஸ்லிம்களை தடைசெய்ய புதிய ஆணை: ட்ரம்ப் உறுதி

Must read

வாஷிங்டன்

ராக் உள்ளிட்ட 7 நாடுகளின் முஸ்லிம்கள் அமெரிக்காவில் நுழைய புதிய தடை ஆணையை பிறப்பிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.

சிரியா, ஈராக், லிபியா, சோமாலியா, ஈரான், சூடான் ஏமன் ஆகிய 7 நாடுகளின் அகதிகள், சுற்றுலாப் பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தடைவிதித்தார்.

இந்தத் தடைக்கு சியாட்டிலில் இருக்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு தடையும் விதித்தது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ட்ரம்ப், நீதிமன்றத்தின் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாகவும் அந்த வழக்கில்  நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று கூறினார்.

மேலும் புதிய தடையாணையை பிறப்பிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர திட்டம் வைத்திருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்தப் புதிய தடையாணை நாளை அல்லது நாளைமறுநாள் பிறப்பிக்கப்படலாம் என நம்பப் படுகிறது.

More articles

Latest article