சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி படுகொலை செய்யப்பட்டதை போலவே ஒரு சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள பாஹின்சா நகரை சேர்ந்த மகேஷ் என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண் விலகி விலகிப்போகவே, ஆத்திரமடைந்த மகேஷ் அந்த இளம்பெண்ணின் வீட்டு முன்பாகவே அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனை கண்டு பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். .
இந்த கொடூர சம்பவம் குறித்து பாஹின்சா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel