
விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் ‘லிப்ட்’ படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.
இதனிடையே, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்து வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளார். இவர் ‘பிகில்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.
லிப்ட்’ படத்தில் நடித்திருப்பது குறித்து காயத்ரி ரெட்டி கூறியிருப்பதாவது:
இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் மிக வலிமையானதாக இருப்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
படத்தில் பல இடங்களில் என் கேரக்டர் எமோஷனலாக இருக்கும். நடிக்கும்போதும் டப்பிங் பேசும்போதும் அதை நான் உணர்ந்தேன். இந்த ‘லிப்ட்’ படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் படம் வெளியானபின் திரையுலக வாழ்க்கையில் ஒரு நல்ல லிப்ட் கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel