சென்னை: தமிழகத்திற்கு மேலும் 78 ஆயிரம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இதை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அவைல தீவிரமாக பரவி வருகிறது. கட்டுப்படுத்துதில், தமிழக அரசு தீவிர பணியாற்றி வருகிறது., சென்னையில் தொற்று பரவல் குறையத் தொடங்கிய நிலையில், கோவை, சேலம், திருச்சி மதுரை போன்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.
இதற்கிடையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமடைந்துமள்ளது. அரசுடன் இணைந்து தனியாா் மருத்துவமனைகளும் தடுப்பூசிமுகாம்களை நடத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசு தமிழகத்திற்கு போதுமான அளவு தடுப்பூசிகளை ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை மும்பையிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் 7 பாா்சல்களில் 220 கிலோ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அதில் 78,240 டோஸ்கள் கோவிசீல்டு தடுப்பூசிகள் வந்தன.
இந்த தடுப்பூசிகள் சென்னை மற்றும் வேலூரில் உள்ள 3 தனியாா் மருத்துவமனைகளுக்கு வந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து சென்னை விமானநிலைய அதிகாரிகள் தடுப்பூசி பாா்சல்களை பிரித்து தனித்தனி குளிா்சாதன வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.