ராஞ்சி

த்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிற்றூர்களில் பாதி சிற்றூர்களில் கொரோனா பாதிப்பு அடியோடு குறைந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று 2,824 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 9,62,368 பேர் பாதிக்கப்பட்டு 12,848 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 9,00,100 பேர் குணம் அடைந்து தற்போது 49,420 பேருக்குப் பாதிப்பு உள்ளது.

கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.  குறிப்பாகச் சிற்றூர்களில் பணிபுரியும் சுகாதார பெண் ஊழியர்கள், மற்றும் ஆசிரியைகள் வீடு வீடாகச் சென்று கொரோனா கணக்கெடுப்பை நடத்தி உள்ளனர்.   கிராமப்புறங்களில் பல புதிய சோதனைச்சாலைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் அதிகரிக்கப்பட்டன.

இதனால் மாநிலத்தில் முன்பு 22000 மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில் அது 70000 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் மாவட்ட அளவிலான கொரோனா சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைப் படுக்கைகள் அதிகரிக்கப்பட்டன.   இதனால் கிராமப்புறங்களில் கொரோனா  பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது.

தற்போது சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 20,092 சிற்றூர்களில் 9,462 சிற்றூர்களில் கொரோனா நோயாளிகள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 பலொதா பஜார் மாவட்டம்  – மொத்தம் 957, கொரோனா அற்றவை 402

பமேதாரா மாவட்டம்  – மொத்தம் 702, கொரோனா அற்றவை 311

பிஜபுர் மாவட்டம்  – மொத்தம் 491, கொரோனா அற்றவை 579

தாந்தேவாடா மாவட்டம்  – மொத்தம் 229, கொரோனா அற்றவை 158

துர்க் மாவட்டம்  – மொத்தம் 377, கொரோனா அற்றவை 345

கரிபந்த் மாவட்டம்  – மொத்தம் 342, கொரோனா அற்றவை 722

ரஞ்சந்த்காவ் மாவட்டம்  – மொத்தம் 1599, கொரோனா அற்றவை 1204

ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.