
டில்லி
ரிசர்வ் வங்கி தனது ஆண்டு அறிக்கையை இந்த மாதக் கடைசியில் வெளியிட உள்ளது. அதில் பணமதிப்பு குறைப்புக்குப் பின் மாற்றப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பற்றிய விவரங்கள் வெளியிடலாம் என தெரிய வருகிறது.
பண மதிப்பு குறைப்புக்குப் பின் டிசம்பர் 2ஆம் தேதியன்று பாராளுமன்ற மேலவையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம், 17165 மில்லியன் 500ரூ. நோட்டுக்களும், 6858 மில்லியன் 1000 ரூ. நோட்டுக்களும் புழக்கத்தில் இருந்ததாகவும், இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15.44 லட்சம் கோடி எனவும் தெரிவித்தார். அருண் ஜேட்லி புழக்கத்தில் இருந்த நோட்டுகளில் சுமார் 86% இந்த நோட்டுகளே என தெரிவித்திருந்தார்.
பாராளுமன்ற நிதிக் கமிட்டி காங்கிரஸ் தலைமையில் சமீபத்தில் கூட்டிய கூட்டத்தில் இதுவரை வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்ட பணம் எவ்வளவு என கேட்கப்பட்டது. அதற்கு ரிசர்வ் வங்கி கவர்னர் படேல் அந்த நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் நடப்பதாகவும், விரைவில் முடிந்ததும் முழுத்தகவல் கிடைக்கும் எனவும் கூறினார். அதற்குப் பிறகும் இதுவரை இது குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் அக்கவுண்டிங் இயர் ஜூலையுடன் முடிவடைந்தது. அதனால் இந்த மாத இறுதிக்குள் ஆண்டு அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில் மொத்தமுள்ள கரன்சி நோட்டுக்கள், மற்றும் மாற்றப்பட்ட கரன்சி நோட்டுக்கள் பற்றிய விவரங்கள் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வங்கிக் கணக்குகளை சரிபார்த்ததின் மூலம் பல வரி ஏய்ப்பு பேர்வழிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் சொல்லப்படுகிறது. இதுவரை ஒரு லட்சம் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததால் அவைகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால் இந்த விவரங்கள் வெளியே வரும்போது, எவ்வளவு பணம் மாற்றாப்பட்டது என்பது தோராயமாகக் கூட வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அறிக்கையிலாவது வெளியிடப்படுமா என பொருளாதார வல்லுனர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
[youtube-feed feed=1]