இலங்கை: மருத்துவமனை பெண்கள் கழிவறைக்குள் ரகசிய காமிரா பொருத்திய ‘பலே’ டாக்டர்

கொழும்பு,

பெண்கள் கழிவறையில் ரகசிய காமிரா பொருத்தி இருந்த  இலங்கை அரசு மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அனுராதபுரத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கணக்காய்வாளர் பிரிவில் அமைந்துள்ள பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கழிவறையில் ரகசியயமாக காமிரா பொருத்திப்பட்டிருப்பது தெரிய வந்தது.

அந்த  பிரிவில் பணியாற்றும் பெண்கள் சிலர் டாக்டர்மீது புகார் கூறியதை தொடர்ந்து, போலீசார், சம்பந்தப்பட்ட மருத்துவரை அழைத்து விசாரணையை மேற்கொண்டனர். ஆனால், தன் மீதான குற்றச்சாட்டை டாக்டர் மறுத்த நிலையில், டாக்டர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட டாக்டர் வரும் 15 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அரசு டாக்டரே இதுபோன்ற கீழ்த்தரமான  செயல்களில் ஈடுபட்டிருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Sri Lanka: Secret camera fixed in govt hospitals women's toilet, police case filed against doctor