சென்னை:
மிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி மாதம் பெய்த மழையால் பாதிக்கபட்ட 6.81 லட்சம் எக்டேர் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 11 லட்சம் விவசாயிகள் பயனடைய உள்ளனர். இதன்படி, எக்டேர் ஒன்றுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகை ரூ. 13,500லிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும் மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரண தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், எக்டேர் ஒன்றுக்கு ரூ. 18,000ஆக வழங்கபட்டு வந்த பல்லாண்டு கால பயிர்களுக்கு வழங்கபட்டு வந்த நிவாரணம், ரூ. 25,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதுமட்டுமின்றி மத்திய அரசின் நிதி உதவியை எதிர்நோக்கி விவசாயிகளுக்கு ரூ.116 கோடி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.