சென்னை: குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 காவலர்களுக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 21 பேருக்கு மெச்சத்தக்க சேவைகளுக்கான விருது

நாட்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்தியஅரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகிறது. அதன்படி, சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதுகள் மற்றும் சிறந்த வீரம் மற்றும் தன்னலமற்ற தியாகங்களைச் செய்த வீரர்களுக்கு, வீரப் பதக்கங்களான பரம் வீர் சக்ரா, வீர் சக்ரா மற்றும் மஹா வீர் சக்ரா ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது.

அதன்படி காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.  நடப்பாண்டு நாடு முழுவதும் 1,132  பேருக்கு குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.   2024 குடியரசு தினத்திற்காக காவல்துறை, தீயணைப்பு சேவை, ஊர்க்காவல் படை, சிவில் பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் பணியைச் சேர்ந்த மொத்தம் 1,132 நபர்கள் வீரம் மற்றும் சேவைப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் சேர்ந்த 21 பேர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு ஐஜி லலிதா லட்சுமி, கமென்டண்ட் ராஜசேகரன், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய 3 பேருக்கு விருது மெச்சத்தக்க சேவைக்கான குடியரசுத் தலைவர் விருது உள்பட  தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.