இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார்.

சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்.

இப்படம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் பாடலை நேற்று (07.10.2021) மாலை படக்குழு வெளியிட்டது. அண்ணன், தங்கைக்கு இடையேயான பாசத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான ‘அண்ணே யாரண்ணே மண்ணுல உன்னாட்டம்…’ எனத் தொடங்கும் இப்பாடல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.