சென்னை: அன்னைய்யா S.P.B அவர்களின் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும் என நடிகரும், மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அத்துடன் எஸ்பிபி குறித்த வீடியோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கடந்த 50 நாட்களுக்கும்மேலாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவர் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அவரது மறைவுக்கு திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எஸ்.பி.யின் மறைவு குறித்து நடிகர் கமல்ஹாசன், அவருடன் இருந்த புகைப்படங்களை தொகுத்து வீடியோ பதிவிட்டு, இரங்கல் டிவிட் பதிவிட்டு உள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில், அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று பதிவிட்டுள்ளார்.