சென்னை: முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின கலந்துகொண்டு, மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உதவி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று அரசு சார்பில் கொண்டாடப்படுகிறது. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு இன்று அரசு சார்பில் மரியாதை செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவில்லத்தில் முதலமைச்சர் கருணாநிதி மரியாதை செய்கிறார். அதைத்தொடர்ந்து, கலைஞர் மகளிர் உதவி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், தமிழக காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்கள் 127 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளின் முக்கியமான மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டம் இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ( செப்டம்பர் 15ஆம் தேதி) காஞ்சிபுரத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் துவங்கி வைக்கிறார். இந்த திட்டத்தில், ரூ. 1 கோடியே 6 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர்.
வங்கி கணக்கு இல்லாத குடும்ப தலைவிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு, அதற்காக பிரேத்யேகமாக ஏடிஎம் கார்டுகள் கொடுக்கப்படும். இன்றைய நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி ஏடிஎம் கார்டுகளை குறிப்பிட்ட மகளிருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது ஏற்கனவே வங்கி கணக்குகள் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் வந்து சேரும். ஒரே நேரத்தில் 1 கோடி பேருக்கும் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது என்ற காரணத்தால் , நேற்று முதலே வங்கி கணக்கில் பணப்பரிமாற்றம் என்பது நடைபெற தொடங்கி, பலருக்கு 1000 ரூபாய் வந்துவிட்டது, இதனால் பெண்கள் உற்சாகமாக உள்ளனர்