திருவண்ணாமலை:
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி இன்று திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்குப் பின்னால் உள்ள 2,668 அடி உயர மலை மீது மாலை 6 மணியளவில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷமிட மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்திப் பெற்றது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.
பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தருவது திருவண்ணாமலை என்பது ஐதிகம். இத்தலத்தில் சிவபெருமான் ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே இன்று கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு அனைவராலும் வழிபடப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கடந்த மாதம் 23ந்தேதி ஸ்ரீதுர்கையம்மன் உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீபிடாரியம்மன் உற்சவ மும், ஸ்ரீவிநாயகர் உற்சவமும் நடைபெற்றது. தீபத்திருவிழா கொடியேற்றம் இன்று காலை கொடியேற்றத் துடன் தீபத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
அதைத்தொடர்ந்து இன்று காலை பரணி தீபம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையில் மகாதீபம் ஏற்பட்டது.
தீபம் ஏற்றப்பட்டபோது, பஞ்ச மூர்த்திகள் தங்கக்கொடி மரம் முன் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி ஒன்றாக அமர்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பக்தர்கள் விண்ணதிர அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷமிட மகாதீபம் ஏற்றப்பட்டது.
லட்சணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டதால் எங்கு நோக்கினும் மனித தலைகளாக காட்சி அளித்தது.
திருவண்ணாமலை:
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை. இங்கு அருள்பாலித்து வரும் அருணாசலேஸ்வரர் கோயிலில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. நிறைவு நாள் விழாவாக இன்று காலை கோயிலில் பரணி தீபம் ஏற்பட்டு, இன்று மாலை மலை உச்சியில் அண்ணாமலையார் தீபஜோதி எனும் கார்த்திகை தீபம் (மகாதீபம்) ஏற்றப்படுகிறது.
ஏழு அடி உயரம் உள்ள செப்பு கொப்பரையில், சுமார் 3000 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணியால் செய்த திரியில் இந்த ஜோதி ஏற்றப்படுகிறது.
விளக்கு ஏற்றி ஜோதி சொரூபமாக இறைவனை விளங்குவது மிகவும் பிரசித்தி பெற்றதும், காலம் காலமாக வழக்கத்தில் உள்ள நடைமுறையுமாகும்.
சிவனடியார்களும் நாயன்மார்களும் இறைவனை ஜோதிப்பிழம்பு என்றும் சுடர்ஒளி என்றும் ஞானஒளி என்றும் போற்றி பாடியுள்ளனர். ஜோதி வடிவில் இறைவனை தரிசித்தும் உள்ளனர்.
அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை என்று அருளிய வள்ளலார் சுவாமிகள் இறை வனை ஜோதி வடிவமாக வணங்குவதே சிறப்பானது என்ற தத்துவத்தை உணர்த்தி அந்த ஜோதியிலேயே ஐக்கியமானவர்.
திருவண்ணாமலையில் சமாதி நிலையில் அருள்பாலிக்கும் விசிறி சாமிகள் என்னும் பகவான் யோகிராம் சுரத்குமார் தனது அருளுரையில், ‘இறைவன் ஓர் ஒளிப்பிழம்பு, நெருப்பு பந்து வடிவமாக உள்ளார்’ என்று கூறுகிறார்.