பொறியியல் கவுன்சிலிங்: மாணவர்கள் கவனிக்க!

Must read

ரும் 27ம் தேதி பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான கவுன்சிலிங் வரும் 27ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலையில் நடக்க இருக்கிறது. படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்கூட, இந்த கவுன்சிலிங் என்றாலே என்னவோ ஏதோ என்று பதறுகிறார்கள்.
அவர்களுக்கான செய்தி இது.
மிக மிக எளிமையாக பொறியியல் கவுன்சிலிங்கில் கல்லூரிகளை தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு வந்திருக்கும் பொறியியல் கவுன்சிலிங் அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்துக்கொண்டு வந்தால் பயணம் செய்யும் சென்னை மாநகராட்சி பேருந்தில் கட்டணச்சலுகை உண்டு. ஆகவே,முன்னமே அழைப்பு கடிதத்தின் நகலை எடுத்து வாருங்கள். கூடவே மதிப்பெண் பட்டியல்,சாதி சான்றிதழ்,இருப்பிடச்சான்றிதழ் ஆகியவற்றின் ஒரிஜினல்களை கொண்டு வாருங்கள்.
கவுன்சிலிங் நடப்பதற்கு இரண்டு மணிநேரம் முன்னமே வந்து விடுங்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் வங்கி கவுண்டர்களில் உங்களின் அழைப்பு கடிதத்தை காட்டி ஐந்தாயிரம் கட்ட வேண்டும்; நீங்கள் எஸ் சி அல்லது எஸ் டி மாணவராக இருந்தால் ஆயிரம் ரூபாய் கட்டினால் போதுமானது. இதைக்கட்டியதும் ஒரு ரசீதை எண்ணோடு தருவார்கள்.
நீங்கள் அங்கிருக்கும் டிஸ்ப்ளே அரங்கில் ஒவ்வொரு கல்லூரியில் உள்ள காலி இடங்கள் தொடர்ந்து பெரிய திரைகளில் வந்து கொண்டிருக்கும். அதை பார்த்து அதற்கேற்ப கல்லூரிகளை தெரிவு செய்து கொள்ளலாம். முன்னதாகவே குறைந்தபட்சம் மூன்று கல்லூரிகளை அதுவும் அவற்றுக்கான எண்ணோடு (விண்ணப்பம் பெற்ற பொழுது கொடுக்கப்பட்ட புத்தகத்தில் அந்த எண் இருக்கும். குறித்துக்கொண்டு வாருங்கள்.)
download (1)
உங்களுக்கான கவுன்சிலிங் நேரத்துக்கு முன்னமே நீங்கள்வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். மாணவர் உடன் ஒரே ஒரு நபர் (பெற்றோர் அல்லது காப்பாளர் ) மட்டுமே கூட செல்ல இயலும்.
உள்ளே சென்றதும் கொஞ்ச நேரம் காத்திருப்பீர்கள். . உங்களிடம் ஒரு சிறிய படிவம் கொடுக்கப்பட்டு இருக்கும் ; அதில் பெயர்,விண்ணப்ப எண் முதலிய விவரங்களை பூர்த்தி செய்து வைத்திருங்கள். மூன்று கல்லூரிகளும் கேட்கப்பட்டு இருக்கும். அதை கவுன்சிலிங் அறைக்குள் போனபிறகு பூர்த்தி செய்து கொள்ளலாம்.
உங்களை உள்ளே அழைத்ததும் கவுன்சிலிங் அறைக்குள் செல்லலாம். முதலில் சான்றிதழ்களை சரி பார்ப்பார்கள். ஒரிஜினல்களை காட்ட வேண்டும் ; சரிப்பார்த்து முடிந்ததும் ஒரிஜினல்களை கட்டாயம் வாங்கிக்கொள்ளுங்கள் . அதற்கு பிறகு கணினி முன் போய் உட்காருவீர்கள் , துறை அல்லது கல்லூரி சொன்னால் அதில் காலியாக உள்ள இடங்களை சொல்வார்கள். இப்படி மூன்று சாய்ஸ்களை நீங்கள் தரவேண்டும். ( கல்லூரி பெயரில் கவனமாக இருங்கள் ; ஒரே பெயரில் எண்ணற்ற கல்லூரிகள் இருக்கின்றன –கல்லூரி குறியீட்டு எண் இங்குதான் பயன்படும்).
download
நீங்கள் கேட்ட துறை இருக்கிறது என்றால் பச்சை விளக்கு எரியும் ; நீங்கள் அத்துறையை எடுத்து கொள்ளலாம். சிவப்பு எரிந்தால் அத்துறை இடங்கள் பூர்த்தி ஆகிவிட்டன என்று அர்த்தம். ஒரு வேளை மஞ்சள் எரிந்தால் உங்களுக்கு முன்னர் இருக்கும் பிள்ளை எடுக்கும் சீட்டுக்கு ஏற்ப உங்களுக்கு அவ்விடம் கிடைக்கலாம் . அதுவரை காத்திருங்கள் என்று அர்த்தம்.
கல்லூரியை தெரிவு செய்ததும், உங்களிடம் அந்தக்கல்லூரி தானா என்று வழிகாட்டும் நபர் உறுதி செய்துவிட்டு உங்களை மேலே அனுப்புவார். அங்கே உங்களுக்கு அந்த கல்லூரி கிடைத்ததற்கான உத்தரவை தருவார்கள். அதைப்பெற்றுக்கொண்டால் அதில் குறிப்பிட்டு இருக்கும் தேதிக்கு ஏற்ப மிச்சப்பணத்தை கட்ட வேண்டும். இவ்வளவு தான் கவுன்சிலிங்!
ஒரு வேளை அழைப்பு கடிதம் வராவிட்டால்?
ஒரு வேளை அழைப்புக்கடிதம் வராமல் போயிருந்தாலும் சிக்கலில்லை.
உங்கள் கவுன்சிலிங் நாள் எப்போது என்று அறிந்துகொண்டு ஒருமணி நேரம் முன்னரே வந்துவிடுங்கள். என்கொயரி பிரிவுக்கு போய் உங்கள் விண்ணப்ப எண்ணை சொன்னால் உங்களுக்கான அழைப்பு கடிதத்தை தந்து விடுவார்கள்.
குறிப்பிட்ட தினத்தன்று கவுன்சிலிங் வரமுடியாமல் போனால் அடுத்த செஷனில் கலந்து கொள்ள முடியும். எனினும் அப்பொழுது உள்ள இடங்களில் இருந்தே தெரிவு செய முடியும்
முழுக்க முழுக்க வெளிப்படையாக நடக்கும் இந்த கவுன்சிலிங். “ சீட் வாங்கித்தருகிறேன்” என்று யாராவது பணம் கேட்டால் நம்பவே நம்பாதீர்கள். உங்களின் மதிப்பெண்ணுக்கு உரிய சீட் கண்டிப்பாக கிடைக்கும்.
அண்ணா பல்கலை இணையதளம்:
கூடுதல் தகவல்களுக்கு  அண்ணா பல்கலை இணையதளத்தைப் பாருங்கள்:  http://aucoe.annauniv.edu/contact.html
 
DSC_0186
 
வழி:
சென்னைக்கு ரயில் மூலமாக தாம்பரம், எழும்பூர், சென்ட்ரல் நிலையங்களுக்கு வந்து இறங்கலாம். அல்லது பேருந்து மூலமாக கோயம்பேடு வந்து இறங்கலாம். தென் மாவட்டங்களில் இருந்து தாம்பரம் வழியாக வருவோர் கிண்டி பேருந்து நிலையத்தில் இறங்கலாம். கடலோர மாவட்டங்களில் இருந்து பாண்டிச்சேரி வழியாக ஈ.சி.ஆர். சாலை வழியாக வருவோர் கிண்டி அண்ணா பல்கலை வாயிலிலேயே இறங்கிக்கொள்ளலாம்.
சென்னை மாநகரப்போக்குவரத்து பேருந்துகளின் தடம் எண்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட விக்கிபீடியா  தொடுப்பை சொடுக்குங்கள்..
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
 
mrts3_1679621g
மாடி ரயில் என்று அழைக்கப்படும் மேம்பால ரயில் சென்னை வேளச்சேரியில் இருந்து பீச்  நிலையம் வரை இயங்குகிறது. இந்த வழித்தடத்தில் உள்ள இடங்களில் வந்து இறங்குவோர் அல்லது தங்கியிருப்போர் கஸ்தூரிபா காந்தி  ரயில் நிலையத்தில் இறங்கி அண்ணா பல்கலைக்கு பேருந்து மூலம் செல்லலாம்.
(கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரை செல்லும் மெட்ரோ ரயில் என்பது வேறு. ஆகவே கவனம் தேவை.)

More articles

1 COMMENT

Latest article