சென்னை: அண்ணா பல்கலைகக்ழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் கண்டித்து, அண்ணா பல்கலைக்கழகம் எதிராக  போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட  அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுக போராட்டம் நடத்த காவல்துறையினர்  அனுமதி மறுத்த நிலையில், அதை மீறி  சாலையில் அமர்ந்து அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இது தொடர்பாக  அடையாறு பகுதியில்  பிரியாணி உணவகத்தை நடத்தி வரும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திமுக நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இவர்மீது பல வழக்குகள் இருந்தாலும், காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதன் காரணமாக இதுபோன்ற கொடூர சம்பவத்தை ஞானசேகரன் அரங்கேற்றி உள்ளார் என விமர்சிக்கப்படுகிறது.

இந்தம நிலையில்,  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒட்டி, அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூறியதால், அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், அதிமுக  போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர்  சாலையில் அமர்ந்து  மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் இச்சம்பவத்தால் கிண்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோகுல இந்திரா உள்பட அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து,  சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.  சென்னை போக்குவரத்து காவல்துறை எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள பதிவில்,  அண்ணா பல்கலை. பிரதான வாயில் முன்பு நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, போக்குவரத்து மாற்றம் “லிட்டில் மவுண்டில் இருந்து வாகனங்கள் சைதாப்பேட்டை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது” வாகன ஓட்டிகள், போக்குவரத்து மாற்றத்திற்கு ஏற்ப பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தி உள்ளது.