சென்னை: அண்ணா பலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இணையதளத்தில் வெளியிட்டுஉள்ளது.

2024 நவம்பர்/டிசம்பர் 2024இல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (ஏப்ரல் 5) காலை இணையதளத்தில்  வெளியிட்டுள்ளது.

1978 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் ஒரு மாநில அளவிலான சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்கிறது. மேலும், யுஜிசி மற்றும் ஏஐயுவால் அங்கீகரிக்கப்பட்டு , என்ஏஏசியால் ஏ கிரேடுடன் அங்கீகாரம் பெற்றது . அண்ணா சென்னை பல்கலைக்கழகம் டைம்ஸ் உயர் கல்வி 2025 இன் இடைநிலை அறிவியல் தரவரிசையில் 1 வது இடத்தையும் , என்ஐஆர்எஃப் தரவரிசை 2024 இன் பல்கலைக்கழக பிரிவின் கீழ் 13 வது இடத்தையும் பிடித்துள்ளது . அண்ணா பல்கலைக்கழகம் அதன் தொலைதூர கல்வி மையம் வழியாக தொலைதூரக் கற்றல் படிப்புகளையும் வழங்குகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 400க்கும் மேற்பட்ட உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகமே தேர்வுகளை நடத்தி வருகிறது.  பொதுவாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் டிசம்பர் மாதம் என இரண்டு மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடப்பது வழக்கம்.  அதன்படி,  ஏப்ரல் மாதம் முதல், மூன்றாம், ஐந்தாம் செமஸ்டர் தேர்வுகளும், டிசம்பர் மாதத்தில் இரண்டாம், நான்காம், ஆறாம் செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படுவது வழக்கம். அ

ந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து UG, PG மற்றும் PhD மாணவர்களுக்குமான டிசம்பர் 2024 இரண்டாம், நான்காம், ஆறாம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

.மாணவர்கள் தேர்வு முடிவுகளை கீழ்காணும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையத்தளப் பக்கமான coe1.annauniv.edu பார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த இணையத்தளத்தில் BA, B.Sc., B.Com., BCA, B.Ed போன்ற UG, PG மற்றும் PhD உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிட்டுள்ளது.

மேலும் தேர்வு முடிவுகளில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் தேர்வு தாளின் புகைப்பட நகல் வேண்டி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் 11-04-2025 காலை 10:00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை வைத்து மாணவர்கள் மறு மதிப்பீட்டிற்கு அனுப்பு முடியும். இதற்கான கட்டண விவரங்களை தங்கள் கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் கேட்டு தெரிந்துகொள்ளலாம். தேர்வுகள் தொடர்பான கூடுதல் தகவல்களை பெற சென்னையில் உள்ள கிண்டி அண்ணா பல்கலைகழகத்தின் மின்னஞ்சல் முகவரி (acoeud@annauniv.edu) வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.