சென்னை:
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் ஏப்ரல், மே மாத பருவத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தோ்வு ரத்து செய்யப்பட்டதால், முந்தைய பருவத் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தோ்வு முடிவுகளை இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். முந்தைய பருவத் தோ்வு மதிப்பெண், அக மதிப்பீடு மதிப்பெண் அடிப்படையில் மாணவா்களுக்குத் தோ்ச்சி அளிக்கப்பட்டுள்ளது.
அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்பு, அடுத்த பருவத்துடன் அரியா் தோ்வுகள் நடைபெறும். பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கான தோ்வு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழக வழிகாட்டுதலின்படி நடத்தப்படும். இதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவா்களுக்கு இறுதியாண்டு தவிர, மற்ற மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்படுவாா்கள் என முதல்வா் ஏற்கெனவே அறிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. மதிப்பெண் கணக்கீடு செய்யும் முறை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
அதன்படி செய்முறை அல்லாத படிப்புகளுக்கு முந்தைய பருவத்திலிருந்து இருந்து 30 சதவீத மதிப்பெண்ணும், 70 சதவீத அக மதிப்பெண்கள் அடிப்படையிலும் கணக்கிடப்பட்டுள்ளன.செய்முறை வகுப்புகள் கொண்ட பாடங்களுக்கான மதிப்பெண்ணை கடந்த பருவத்தில் நடத்தி முடிக்கப்பட்ட செய்முறைகளின் அடிப்படையில் 100 சதவீதத்துக்கு கணக்கிட வேண்டும்.செய்முறை, கருத்தியல் இரண்டும் இணைந்த பாடங்களுக்கு அக மதிப்பீடு மதிப்பெண் அடிப்படையில் 70 சதவீதமும் 30 சதவீதம் கடந்த பருவத்தோ்வு மதிப்பெண் அடிப்படையிலும் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.”