சென்னை
அண்ணா பல்கலைக்கழகம் ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் ஆளில்லா விமான திட்டத்தின் ஆலோசகராகவும் நடிகர் அஜித்குமாரை நியமித்துள்ளது.
தனது ரசிகர்களால் “தல” என செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் அஜித் குமார். இவர் கார் மற்றும் பைக் பந்தயங்களிலும் விமானம் ஓட்டுவதிலும் பெரிதும் ஆர்வம் உடையவர். கார் பந்தயத்தின் போது சாகசமாக ஓட்டி பலரின் பாராட்டுகளை பெற்றவர். அவருக்கு மேலும் ஒரு கௌரவத்தை அண்ணா பல்கலைக்கழகம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மதராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அஜித்குமாரை ஹெலிகாப்டர் சோதனை விமானியாகவும் ஆளில்லா விமான திட்டத்தின் ஆலோசகராகவும் நியமித்துள்ளது.
வரும் செப்டம்பர் மாதம் ஆளில்லா விமானங்கள் மூலம் மருத்துவ உதவி வழங்கும் மெடிகல் எக்ஸ்பிரஸ் 2018 என்னும் போட்டி ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் மதராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிக்கு அஜித் உதவி செய்ய உள்ளார்.
Photo courtesy : Ramesh bala’s twitter