ஹெலன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகை அன்னா பென்.

தற்போது நடிகை அன்னா பென் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பதிவை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

”நான் ஷாப்பிங் சென்ற போது, இரண்டு வாலிபர்கள் என்னை பின் தொடர்ந்து வந்து, எனது பின்னால் தட்டினார்கள். அப்போது நான் ஷாக் ஆகிவிட்டேன். என்னால் எந்த எதிர்விணையும் ஆற்றமுடியவில்லை.

என் சகோதரி என்னவென்று கேட்டபோது கூட என்னால் சொல்ல முடியவில்லை. அவர்களை தவிர்க்க வேண்டும் என்று நான் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டேன். மேலும் அவர்கள் என்னை ஃபாலோ செய்து வந்து பேச முயற்சித்தனர் .

ஆனால் என்னால் அவர்களை எதுவும் செய்யமுடியவில்லை. நான் அவர்களை அந்த இடத்திலேயே பளார் என அறைந்திருக்க வேண்டும் என தோன்றுகிறது. ஒரு பெண் தன்னை எப்போதுமே பாதுகாத்து கொண்டிருப்பது மிகவும் கஷ்டமான ஒன்று. இதுபோல கீழ்தரமாக செயல்படும் ஆண்கள் மனிதர்களே இல்லை” என்று அவர் எமோஷனலாக தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]