சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் டிவிட் பதிவிட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,
தாய்த்தமிழின் மீது அளவற்ற பற்றும், தீராக்காதலும் கொண்ட தமிழன்னையின் தலைமகன்.
நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு எனும் பெயரை சட்டப்பூர்வமாக்கி, இரு மொழிக்கொள்கையே தமிழகத்தில் தொடரும்,
வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த சிறந்த மனிதநேய பண்பாளரின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறேன்.
என கூறி உள்ளார்.
ஓபிஎஸ் டிவிட்டில,
தமிழை சுவாசித்தவர்; தமிழர்களை நேசித்தவர்; ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்;
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்!
தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்.
என கூறி உள்ளார்.