சென்னை: பேரறிஞர்  அண்ணா அவர்களின் 114-ஆவது பிறந்தநாளை ஒட்டி, அதிமுக  சார்பில் அவரது திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதுபோல, ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்று அண்ணா சமாதியில் மரியாதை செலுத்தினார். தஞ்சையில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த படத்துக்கு சசிகலா மரியாதை செய்தார்.

பேரறிஞர் அண்ணா  பிறந்த நாளையொட்டி திமுக சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமி  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவரும், தமிழ்நாடு வக்ஃபு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் அ. தமிழ்மகன் உசேன், கழக துணைப் பொதுச் செயலாளர் களும், முன்னாள் அமைச்சர்களுமான கே.பி. முனுசாமி, M.L.A.,  நத்தம் இரா. விசுவநாதன், M.L.A., அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான C. பொன்னையன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், M.L.A., கழக தலைமை நிலையச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான S.P. வேலுமணி, M.L.A., கழக அமைப்புச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களுமான D. ஜெயக்குமார், மோகன், முக்கூர் என். சுப்பிரமணியன், செஞ்சி ந. ராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் திரு. வாலாஜாபாத் பா. கணேசன், Ex. M.L.A., கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் கா. சங்கரதாஸ் உள்ளிட்ட தலைமைக் கழகச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்களும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

 

அதே வேளையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மரியாதை செயதனர்.

தஞ்சை பரிசுத்த நகரில் உள்ள சசிகலாவின் வீட்டு வளாகத்திற்குள் வைக்கப்பட்டு இருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.