ஆர்ஆர்ஆர் படத்தை தொடர்ந்து ஜுனியர் என்டிஆர் கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படமும், கொரட்டல சிவா இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கிறார்.

இதில் கொரட்டல சிவா படம் முதலில் தயாராகிறது. இது ஜுனியர் என்டிஆரின் 30 வது படம். இதற்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்கு அடுத்த மாதம் கம்போஸிங்கை அனிருத் தொடங்குகிறார்.

அஜித், விஜய்யிலிருந்து ரஜினி, கமல்வரை வந்துவிட்டார் அனிருத். தெலுங்கில் பவன் கல்யாண் படத்தைத் தொடர்ந்து ஜுனியர் என்டிஆர் படத்துக்கு இசையமைக்கிறார்.