‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அனிருத்…!

Must read

விஜய் தொலைக்காட்சியில் சுமார் 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில்‘சூப்பர் சிங்கர்’ ஜூனியர் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, நடைபெற்றது. இதில், ரித்திக் டைட்டிலை வென்று, 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டைப் பரிசாகப் பெற்றார்.

இந்நிலையில், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் வழிநடத்தும் 16 வயதுக்கும் மேற்பட்டோருக்கான ‘சூப்பர் சிங்கர் 7’, வருகிற சனிக்கிழமை (ஏப்ரல் 27) தொடங்க இருக்கிறது.

இதில் சிறப்பு நடுவராக அனிருத் கலந்துகொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட இருக்கிறது.

More articles

Latest article