மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி தயாரித்து, நடித்து வருகிறார் கே.எஸ்.ரவிகுமார். ‘கூகுள் குட்டப்பா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் அனில் கபூர் நடிக்கவுள்ளார். ரீமேக் உரிமையை ஃபைத் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக விக்கி ரஜனி கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.