
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார்.
பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் நயன்தாரா ஒரு ரோல் மாடலாக தான் விளங்குகிறார் என்று சொல்வது மிகை ஆகாது .
இந்நிலையில் தற்போது அனிகாவின் புகைப்படங்கள் சில வெளியாகி அதனை ரசிகர்கள் நயன்தாராவுடன் ஒப்பிட்டு வருகின்றனர்.
நானும் ரௌடி தான்,விஸ்வாசம்,மிருதன்,என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அசத்தி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் அனிகா.
இவர் பகிர்ந்த புகைப்படம் செம வைரலாக இது நயன்தாராவின் சின்ன வயசு போட்டோவா என்று பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.மேலும் நயன்தாரா பற்றிய சுயசரிதை எடுத்தால் அதற்கு இவர் சரியாக இருப்பார் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel