கடந்த வருடம் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், கடந்த 2020-ம் ஆண்டு இறுதியில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டது.
நிலைமை சரியாகிவிட்டது என நினைக்கும் தருவாயில் கொரோனாவின் இரண்டாம் அலை கோரத்தாண்டவம் மீண்டும் தொடங்கி விட்டது. போன முறையை விட இந்த முறை அதி வேகமாக பரவி வருகிறது கொரோனா.
பலரும் கொரோனாவின் 2-வது அலையில் சிக்கித் தவிக்கும் நிலையில் திரைத்துறை நட்சத்திரங்களும் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல நடிகை ஆண்ட்ரியாவிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த வாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. என்னைப் பார்த்துக்கொண்ட என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. இன்னும் வீட்டுத்தனிமையில்தான் உள்ளேன். தற்போது நல்லபடியாக குணமடைந்துவருகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.