சென்னை: இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி நிறுவனமான சென்னை  ஐ.ஐ.டி.யில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு படித்து வந்தவர், ஆந்திராவை சேர்ந்த மாணவர் புஷ்பக். அவர் விடுதியில் தங்கியிருந்து 3வது ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று  விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மாணவர் தற்கொலை சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்வியில் சிறந்த சென்னை ஐஐடி சர்ச்சைகளிலும் முன்னிலையில் இருப்பருது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது மாணாக்கர்கள் தற்கொலை மட்டுமின்றி, சாதிய பாகுபாடு தொடர்பான பிரச்சினைகளும் உருவாகி வருகிறது. ஏற்கனவே  சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த பாத்திமா தற்கொலை செய்துகொண்டார்.  இது மதப்பிரச்சைனாயக்கப்பட்டது. அதுபோல கடந்த 2021-ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் எரிந்த நிலையில் மாணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த மாணவரின் பெயர் உன்னிகிருஷ்ணன் நாயர் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த  மாதம் மராட்டியத்தை சேர்ந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனஅழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை முடிவை நாடுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று ஆந்திர மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தற்கொலை  தொடர்பாக ஐஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில்,  பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் தற்கொலைகளை தடுக்க முடியவில்லை.  காலையில் நன்றாக பேசி கொண்டிருந்த மாணவர் புஷ்பக் வகுப்புக்கு வராமல் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா காலகட்டத்துக்கு பிறகு ஐஐடி மாணவர்கள் பல்வேறு சமூக அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பொருளாதாரம், குடும்ப பிரச்சனை, மன அழுத்தம் காரணமாகவே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாணவர்களுக்கும், பேராசியர்களுக்கும் தொடர்ந்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் புஷ்பக் தற்கொலை தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை வெளியிடப்படும். தற்கொலைகளை குறைக்க மாணவர்களின் ஆலோசனைப்படி, சில திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐஐடி நிர்வாகம் விளக்கமளித்துள்ளது என்பது குறிப்பிடத்தகத்து.