ஐதராபாத்:

பிரபல வீடியோ சமூக வலைதளத்தளமான யுடியூபில் அதிக வாசகர்களை கவரும் வகையில், ரயில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டர், பைக் வைத்து வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்ப்பட்டு கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஏதாவது பதிவிட்டு, ஏராளமான லைக் மற்றும்  வியூவர்கள் காண வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு ஷேர் செய்து வருகின்றனர். பலர் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அடிமையாகியும் வருகின்றனர்.

இந்த நிலையில், பிரபல  ‘சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ஆந்திரா ரேணிகுண்டா பகுதியைச்  சேர்ந்த ராமிரெட்டி. என்ற இளைஞர், யுடியூப்பில் வீடியோ பதிவு செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் விபரீதமான வகையில் வீடியோ வெளியிட முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ரயில்வே தண்டவாளத்தில்,  பொம்மைகள், கோழி, சைக்கிள் செயின், கேஸ் சிலிண்டர், பைக், பட்டாசு போன்ற பல்வேறு பொருள்களை ரயில்வே தண்ட வாளத்தில் வைத்து ரயில் வரும் வரை காத்திருப்பார். தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மீது ரயில் ஏறி செல்லும் காட்சிகளை வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பலரின் பார்வைகளை ஈர்த்துள்ளார்.

தனது பார்வையாளர்களை மேலும் அரிகரிக்கும் எண்ணத்தில், ரயில் தண்டவாளத்தில் தன்னு டைய பைக், சிலிண்டர் போன்றவற்றை வைத்து ரயில் மோதும் வீடியோ காட்சிகள் எடுத்து அதை யுடியூப் சேனரில் பதிவேற்றினார். இது சமூக வளைதளத்தில் வைரலான நிலையில், அதனால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் விமர்சிக்கப்பட்டன. இந்த வீடியோ குறித்து ரயில்வேக்கு புகார் சென்றனர்.

இது குறித்து விசாரணை நடத்திய ரயில்வே காவல்துறையினர்,  வீடியோ பதிவு மற்றும் அதில் இடம்பெற்ற பைக்கின் பதிவு எண்ணை வைத்து, ராமிரெட்டியை அலெக்காக தூக்கினர். தற்போது ராமிரெட்டி சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

‘இதுகுறித்து கூறிய காவல்துறையினர், ராமிரெட்டி இதுபோல 43 முறை சமூக வலைதளத்தில் வீடியோ பதிவேற்றி இருப்பதாகவும், அவர் சைக்கிள் செயினை தண்டவாளத்தில் வைத்து வீடியோ எடுத்த போது சைக்கில் செயின் ரயில் சக்கரத்தில் சிக்கி இருந்தால் ரயில் கவிழ்ந்திருக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கும், அதுபோல,  தண்டவாளத்தில் வைக்கப்பட்ட கேஸ் சிலிண்டர் வெடித்திருந்தால் ரயில் பயணிகள் பலர் உயிரிழந்திருக்க கூடும் என்று அதிர்ச்சி தெரிவித்தனர்.

இது தொடர்பாக ராமிரெட்டி மீது ரயில்வே சட்டம் 153, 147 ஆகிய பிரிவுகளில்த்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையல் அடைத்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

யுடியூப் வீடியோ மோகம் இன்று அந்த இளைஞரை கம்பி எண்ண வைத்துள்ளது…