சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை அந்தமான் புறப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு! கண்டறியப்பட்டது, உடனடியாக அந்த விமானம் சென்னை விமான நிலையத்திலேயே தரை இறக்கப்பட்டதால், 123 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளதால், விமான சேவைகள் மீண்டு வருகின்றன. தற்போதைய நிலையில் 80 சதவிகித விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை, சென்னையிலிருந்து அந்தமான் செல்லும் ஏா்இந்தியா விமானம் 117 பயணிகள் உட்பட 123 பேருடன் சென்னை உள்நாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்பட்டது இந்த விமான நடுவானில் பற்தநபோது, திடீா் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதை கண்டுபிடித்த விமானி அவசரமாக சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவசரமாக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இதன் காரணமாக, சென்னையில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போா்க்கால அடிப்படையில் துரிதமாக செய்ய விமானநிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.அதன்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன. இந்த நிலையில், இயந்தி கோளாறு ஏற்பட்ட ஏா்இந்தியா பயணிகள் விமானம் சென்னை விமானநிலையத்தின் இரண்டாவது ஓடுபாதையில் பத்திரமாக தரையிறங்கியது.
உடனே விமானத்திலிருந்த 123 பேரும் வெளியேற்றப்பட்டு விமானநிலைய பயணிகள் ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதன் காரணமாக 123 போர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.இந்த சம்பவம் பற்றி விமானநிலைய உயா்அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனா்.
பழுதான விமானத்தை விமான பொறியாளா்கள் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனா். ஏா்இந்தியா அதிகாரிகள் பயணிகளை மாற்று விமானம் மூலம் அந்தமானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.