காஞ்சிபுரம்:

ன்று ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தையொட்டி, அத்திவரதர் தரிசனம் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாலை  மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக  என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.

40ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளியுள்ள அத்திரவரதரை தரிசிக்க தினசரி லட்சக்கணக்கானோர் குவிந்து வருகின்றனர். இதன் காரணமாக கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 2 மணியுடன் கிழக்கு கோபுரம் மூடப்படுவதாகவும், அதுபோல முக்கிய பிரமுகர்கள் தரிசன வழியும் மதியம் 2 மணிக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கிழக்கு கோபுரம் வழியாக கோயிலுக்குள் வந்த பக்தர்கள் மாலை 5 மணி வரை அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டு, 8 மணிக்குப் பிறகு மீண்டும் தரிசனம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவில் வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரத்தில் அத்திவரதர் தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.