திருவள்ளூர்: கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர மாநில தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவின்ர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Anbumani ramdoss led PMK protests against Andhra Pradesh’s proposed checkdams across Kosasthalaiyar
ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூபாய் 177 கோடி நிதி செலவிர் 2 தடுப்பணைகள் கட்ட முடிவு செய்துள்ளது. அதைத்தொடர்ந்து தடுப்பணை கட்டவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால், தமிழக விவசாயிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்க்கூடிய பூண்டி ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் தடைபடும் மற்றும் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமகவினர் விவசாயிகள் ஆதரவுன் ஆந்திர அரசுக்கு எதிராக திருவள்ளூர், திருத்தணி தொகுதி தமிழ்நாடு எல்லையான பள்ளிப்பட்டு பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். முன்னதாக, சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்ட பேரணியும் நடைபெற்றது. ஏராளமானோர் ஆந்திர அரசு அடுப்பணை கட்டக்கூடாது, அதற்கு தமிழகஅரசு அனுமதிக்க கூடாது என்ற பதாகையுடன் ஊர்வலமாக நடந்து வந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “தமிழ்நாடு அரசு உடனடியாக ஆந்திர மாநில அரசு கட்டும் தடுப்பணை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். சென்னையில் வசிக்கும் ஒரு கோடி மக்களுக்கு நீர் ஆதாராமாக இருக்கக்கூடிய பூண்டி ஏரிக்கு இந்த கொசஸ்தலை ஆற்றில் இருந்துதான் நீர் வருகிறது. இந்த கொசஸ்தலை ஆற்று தண்ணீரை தடுத்து ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கொசஸ்தலை ஆற்றுக்கு தண்ணீரானது ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையில் இருந்து வருகிறது. இந்த அணையின் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு சுமார் ரூபாய் 177 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு விரைவாக செயல்பட்டு, தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும். சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்றாவது ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், இதற்கான செயல் திட்ட வடிவங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். நீர் நிலை செயல் திட்டத்திற்கு என்று தனி கவனத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
நீர் நிலை பாதுகாப்புக்கு என்று தமிழ்நாடு அரசு சிறப்பு செயல் திட்டங்களை செயல்படுத்தி விரைவாக தமிழ்நாட்டில் நீர் நிலைகளை காக்க வேண்டும். மீண்டும் தடுப்பணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு முன் நின்று செயல்படுத்தினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் செய்யப்படும்” என தெரிவித்தார்.