சென்னை

திமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களான மைத்ரேயன், அர்ஜுனன், லட்சுமணன், ரத்தினவேல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. திமுகவின் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது மாநிலங்களவை உறுபினர் பகுதியை ராஜினாமா செய்தார்.

இந்த இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 26 ஆம் தேதி வெளியாகியது. ஜுலை 1 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதுள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால் 7 பேர் போட்டி இட்டால் தேர்தல் நடக்கும் நிலை உண்டாகும்.

திமுக கூட்டணியில் அக்கட்சியின் தரப்பில் சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் போட்டியிட மனு அளித்துள்ளனர். அதிமுக கூட்டணி சார்பில் பாமக வுக்குஒரு இடம் அளிக்கபட உள்ளது எனவே பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி கே மணி அறிவித்துள்ளர்.