சென்னை:
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் பெற்றார்.

2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், 2026-ம் ஆண்டு வரவிருக்கிற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கும் சேர்த்து பா.ம.க முழு வேகத்துடன் தயாராகிவருகிறது. அதற்கான பணிகளும் முழுமூச்சுடன் நடைபெற்றுவருகின்றன.

இந்த நிலையில், பா.ம.க சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், சென்னை திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பாமக நிறுவனா் ராமதாஸ் தலைமை வகித்தார்.

இந்த நிலையில் அன்புமணி தற்போது பா.ம.க-வின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த
பாமகவின் புதிய தலைவராக தேர்வான அன்புமணி ராமதாஸ் வாழ்த்து பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் எப்சிய அவர், முதலமைச்சரை சந்தித்து தடுப்பணைகள் கட்டுவது குறித்த திட்டத்தை வலியுறுத்தினேன் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கால நிலை மாற்றம் குறித்து தொலைநோக்கு பார்வையை முன்வைத்து, அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அடுத்த 30-40 ஆண்டுகளில் சரி செய்ய முடியும் என்றார்.

மேலும், மக்களின் அன்றாட பிரச்னைகளை சரி செய்து, அவர்களின் ஆதரவை பெற போகிறோம் என்றும், பாமக 2.0 செயல் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக, கிராமமாக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றும் கூறினார்.