சென்னை:

டிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் எழுதிய அன்பும் அறிவும் என்ற வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில்உள்ளது. இந்த நிலையில், வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதை வலியுறுத்தி, மக்களிடையே  விழிப்புணர்வை ஏற்படுத்தும் பாடல் இன்று வெளியிடப்பட்டது.

மத்திய மாநிலஅரசுகள், தன்னார்வலர்கள்  எவ்வளவுதான் உதவி செய்தாலும்,  நாம் ஒவ்வொரு வரும் அனைவரிடமும் அன்பு செலுத்தி உதவி தேவையானவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என அந்த பாடலில் வலியுறுத்தி உள்ளார்.

இந்த பாடலுக்கு M.ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், படத்தொகுப்பு செய்தவர் மஹேஷ் நாராயணன். இந்த பாடலை பாடியோர்: மாஸ்டர் லிடியன் பாம்பே ஜெயஸ்ரீ, ஆண்ட்ரியா ஜெரிமியா யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்தார்த், முகேன் ராவ், ஷங்கர் மகாதேவன் ஸ்ருதி ஹாஸன்,  தேவி ஸ்ரீபிரசாத்.

பாடல்: கமல் ஹாசன் படத்தொகுப்பு: மஹேஷ் நாராயணன். ஆக்கமும் இயக்கமும்: கமல் ஹாசன்

பொது நலமென்பது தனி மனிதன் செய்வதே

தன் நலமென்பதும் தனி நபர்கள் செய்வதே

என்று தொடங்கும் அந்த பாடல்…

 சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு

அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே

அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே

சரி சமம் என்றிடும் முன்பு உனைச் சமம் செய்திடப் பாரு

சினையுறும் சிறு உயிர் கூட உறவெனப் புரிந்திடப் பாரு

அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே…

என்று முடிவடைகறிது.

கருத்தாழமிக்க இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

 

: