சென்னை:

தான் தமிழகத்தில் படித்தும், தமிழைப் படிக்காததற்காக வெட்கப்படுகிறேன் என  பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேதனை தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.

உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி ஐ.நா.சபையில் உரையாற்றியபோது, தமிழ் உலகின் பழமையான மொழி என்று தெரிவித்திருந்த நிலையில், நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி ஐஐடி மாணவர்கள் மத்தியிலும் தமிழ் மொழியின் சிறப்பு தமிழர்களின் விருந்தோம்பல் குறித்தும் சிலாகித்து பேசினார்.

பிரதமர் மோடியின் பேச்சைக்  குறிப்பிட்டு பிரபல தொழிலதிபதின மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மகேந்திரா டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில், ஐநாவில் பேசிய மோடி உலகின் பழமையான மொழி என்று தமிழைக் குறிப்பிட்டார். அதுவரையிலும் அதை தெரிந்துகொள்ளாமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். அந்த உண்மை எனக்குத் தெரியாமல் இருந்துள்ளது. தமிழ் மொழியின் பெருமையை இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும்.

நான் ஊட்டியில் உள்ள பள்ளியில் படித்தேன். அப்போது நான் தமிழை படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யும் சில வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவின் டிவிட் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]