சென்னை:
மிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பகல் நேரத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவான அம்பான்  புயல், தமிழகத்திற்கு கொஞ்சமாவது கருணை காட்டுமா என எதிர்பார்த்தால், அஷ்கு புஷ்கு என்று போக்குகாட்டு விட்டு, தமிழக்ததை விட்டு விலகி ஒடிசா, மேற்கு வங்கத்துக்குச் சென்று காட்டு காட்டு என்று காட்டிவிட்டது.

தமிழகத்தில் அக்னி வெயில் காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் தீவிரமாகி வரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொளுத்தோ கொளுத்து என்று கொளுத்தி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 3 நாட்கள் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அகோரமாக இருக்கும் என்றும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்,  குறிப்பாக அனல்காற்று வீசும் நேரமான காற்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 வரை  குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உள்பட பொதுமக்கள்  யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வட தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அனல் காற்று வீசும்
அம்பான் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால், இன்னும் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.