சென்னை:
லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்று வருகிறது. அதன் தலைமையிடமான சென்னை, மதுரை, கோவை என பல இடங்களில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிகிறது. வரிஏய்ப்பு புகாரை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முதல்கட்டமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நீண்ட காலமாக லலிதா ஜுவல்லரி நிறுவனத்தின் கணக்குகளை கண்காணித்து வந்ததாகவும், தற்போது வரி ஏய்ப்பு என்பது கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெறுவதாக வருமானவரித் துறையினர் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் ஒவ்வொரு இடமாக இந்த சோதனையானது நடைபெறும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.