டெல்லி:

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாழும் கலை பயிற்சி அமைப்பு சார்பில் யமுனை ஆற்றங்கரையில் உலக கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. அப்போது யமுனை ஆற்றங்கரை சேதப்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேசிய பசுமை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆணையம் ஒரு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் வாழும் கலை பயிற்சி மையத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ‘‘பொறுப்பற்ற முறையில் இந்த அமைப்பு செயல்பட்டுள்ளது. என்ன வேண்டுமானாலும் நீங்கள் பேசுவதற்கு சுதந்திரம் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா’’ என்று அந்த அறி க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பசுமை ஆணையத்தின் வல்லுனர்கள் அடங்கிய தீர்ப்பாய குழு ஒன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், ‘‘யமுனை ஆற்றங்கரையில் வாழும் கலை அமைப்பு ஏற்படுத்தியுள்ள பாதிப்பை சரி செய்ய ரூ. 13.29 கோடி செலவாகும். இந்த பணியை மேற்கொள்ள 10 ஆண்டுகள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு யமுனை ஆற்றின் பகுதியில் வெள்ள வடிகால் பகுதி சுமார் 300 ஏக்கரும், கிழக்கு பகுதியில் 120 ஏ க்கர் வெள்ள வடிகால் பகுதியும் பாதித்துள்ளது. மேலும் ஆற்றின் சுற்றுசூழலும் பாதித்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘அந்த பகுதியில் உள்ள நிலப்பரப்பு சமன் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெள்ள நீரோட்டம் பாதிக்கும். பிரம்மாண்ட மேடை அமைக்க வெளியில் இருந்து கச்சா பொருட்கள் கொண்டு வரப்பட்டு கொட்டி நிரவப்பட்டுள்ளது. இந்த கச்சா பொருட்கள் மண்ணில் இருகுவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்று அந்த 47 பக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அந்த அறிக்கை தவறான முறையிலும், அறிவியல் பூர்மாக இல்லாமலும் தயார் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள், ஆதாரங்களை குழுவினர் கண க்கில் எடுத்துக் கொள்ளாமல் அறிக்கை தயாரித்துள்ளனர். ரூ. 120 கோடிக்கு சேதம் என்று கூறி தற்போது படிப்படியாக குறைந்து ரூ. 13 கோடியை நெருங்கியுள்ளனர்.

நிரந்தர சேதம் என்று கூறியவர்கள் தற்போது 10 வருடம் என்று கூறியுள்ளனர். காய்ந்த நிலத்திற்கு சேதம் என்றவர்கள் தற்போது வெள்ளப் பகுதிய சேதம் என்று தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த குழுவினர் மாறி மாறி கருத்து தெரிவித்துள்ளனர்’’ என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஒரு அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

வல்லுனர்களின் அறிக்கை மீது வாழும் கலை அமைப்பு மற்றும் இதர மனுதாரர்கள் எதிர்ப்பு மற்றும் பதிதில் அளிக்கலாம் என்று ஆணையம் தெரிவித்து, இதன் மீதான விசாரணையை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.