சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கேப்டன் அம்ரீந்தர் சிங் கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியை ராஜினாமா செய்தார்.

சட்லஜ் யமுனா இணைப்பு கால்வாய் விஷயத்தில் இவர் இந்த முடிவை எடுத்தார். இவர் 2014ம் ஆண்டு நடந்த இந்த லோக்சபா தொகுதியில் தற்போதைய மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியை வீழ்த்தி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காலியாக இருந்த அமிர்தசரஸ் நாடாளுமன்ற தொகுதிக்கு 5 மாநில சட்டசபை தேர்தலோடு, இடைத்தேர்தல் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில்  காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அதேபோல் அமிர்தசரஸ் தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் குஜ்ரித் சியனா எதிர்த்து போட்டியிட்ட பாஜ வேட்பாளர் ரஜிந்தர் மோகன் சிங்கைவிட சுமார் 2 லட்சம் வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றார்.