சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கழகப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். இதில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தமிழன் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழக சட்டமன்றதேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 12ந்தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. இதனால், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
அதன்படி, அ.ம.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை டிடிவி தினகரன் இன்று வெளியிட்டார். அதில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்.
அதன்படி, அமமுக துணைத் தலைவர் S. அன்பழகன், ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிபட்டியில் கழக துணைப் பொதுச்செயலாளர் பி. பழனியப்பனும்,
பாபநாசம் தொகுதியில் கழக துணைப் பொதுச்செயலாளர் எம். ரெங்கசாமியும்,
சைதாப்பேட்டையில் கழக துணைப் பொதுச்செயலாளர் ஜி. செந்தமிழனும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஸ்ரீரங்கம் தொகுதியில் கழகப் பொருளாளர் ஆர். மனோகரனும்,
மடத்துக்குளத்தில் தலைமை நிலையச் செயலாளர் சி. சண்முகவேலுவும்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலைமை நிலையச் செயலாளர் கே.கே. உமாதேவனும்,
சோளிங்கர் தொகுதியில் தேர்தல் பிரிவு செயலாளர் திஎன்.ஜி. பார்த்திபனும்.
வீரபாண்டி தொகுதியில் கழக அமைப்புச் செயலாளர் வீரபாண்டி எஸ்.கே. செல்வமும்,
உசிலம்பட்டியில் கழக அமைப்புச் செயலாளர் தஐ. மகேந்திரனும்,
கோவை தெற்கு தொகுதியில் கழக அமைப்புச் செயலாளர் ஆர். துரைசாமி (என்கின்ற) சேலஞ்சர் துரையும்,
அரூரில் கழக ஆட்சிமன்றக் குழு தலைவர் அரூர் ஆர்.ஆர். முருகனும்
பொள்ளாச்சியில் கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கே. சுகுமார்,
தருமபுரியில் கழக அமைப்புச் செயலாளர் D.K. ராஜேந்திரன்,
புவனகிரியில் கழக அமைப்புச் செயலாளர் கே.எஸ்.கே. பாலமுருகன்
ஆகியோர் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிடப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் முன்னாள் அமைச்சர் 3 பேர், முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள் என 10 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.