மதுரையில் அம்மா இலவச வைபை திட்டம் தொடங்கப்பட்ட காட்சி

சென்னை:

டந்த சட்டமன்ற தேர்தலின்போது, அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த, அம்மா  இலவச வை-பை வசதி திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டு உள்ளது.

அம்மா வைஃபை மண்டலம் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளிக் காட்சியின் வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இந்தி திட்டம்,  ‘முதல்கட்டமாக சென்னை, கோவை, சேலம், திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்க ளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இச்சேவையானது  தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் வாயிலாக பொதுமக்கள் ஒரு நாளைக்கு   20 நிமிடங்கள் மட்டுமே இலவசமாகப் பயன்படுத்தலாம்.

மேலும் தேவைப்படுவோர், ஒரு மணி நேரத்திற்கு ரூ.10 என்ற கட்டணத்தை கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தி பயன்பெறலாம்.

இச்சேவையை முதன்முதலாக  பயன்படுத்த விரும்புபவர்கள் தங்களிடம் உள்ள  ஸ்மார்ட் போன் மூலம்,  அம்மா வைஃபை என்பதனை தேர்வு செய்து, அதில் பெயர், அலைப்பேசி எண், இ.மெயில் முகவரி உள்ளிட்டவற்றைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு தங்கள் அலைபேசிக்கு வந்துள்ள கடவுச்சொல்லை பதிவு செய்த பின்னர், இச்சேவையினை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த 2016ம் ஆண்டு இதற்கான டெண்டர் கோரப்பட்டது. முதல் கட்டமாக  32 மாவட்டங்களின் தலைநகரங்களில் இலவச ‘வைபை’  வசதியை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும்,   பொதுமக்கள்   அதிகமாக வந்து செல்லும் பேருந்து நிலையம், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அரசு  ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்  போன்ற  இடங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.