புதுடெல்லி

த்திய அமைச்சர் அமித்ஷா தனது தமிழக சுற்றுப்பயணத்தைத் திடீரென ரத்து செய்துள்ளார்.

வரும் 19 ஆம் தேதி  தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள தேர்தலில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உள்ளது.

ஏற்கனவே தேசியக் கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி 3 முறை தமிழகத்திற்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான அமித்ஷா நாளை பிரசாரத்துக்காக மதுரை வர இருந்ததாக அறிவிக்கப்பட்டது.

அமித்ஷா தவிர்க்க முடியாத காரணங்களால் திடீரெனத் தனது பயணத்தை அமித்ஷா ரத்து செய்துள்ளார். அமித்ஷாவின் தமிழகத் தேர்தல் பிரசாரம் எப்போது என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷா தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரையில் அமித்ஷா பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.

[youtube-feed feed=1]