டெல்லி: இந்த சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சன், வரி செலத்துவதிலும், சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். நாட்டிலேயே அதிக வரி செலுத்துவோர் பட்டியலில், ரூ.120 கோடி வரி செலுத்தி அமிதாப் பச்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
2024-25ம் நிதியாண்டில், ரூ. 350 கோடி வருமானத்துடன், ரூ.120 கோடி வரி செலுத்தி, நாட்டிலேயே அதிக வரி செலுத்தும் பிரபலமாக தனது இடத்தைப் பிடித்து உள்ளார். அவரது இறுதி முன்பண வரி தவணையான ரூ.52.5 கோடி மார்ச் 15, 2025 அன்று செலுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் வரி செலுத்தும் பிரபலங்களின் பட்டியலில், நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இந்திய திரைத் துறையின் மூத்த நடிகராக விளங்கும் அமிதாப் பச்சன் 2024-25ம் நிதியாண்டில் ரூ.350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார்.
தற்போது 82 வயதாகும் அமிதாப், கடந்த 1969ம் ஆண்டில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். சுமார் 55 ஆண்டுகளாக பல மொழிகளிலும் நடித்து வருகிறார். கிறது.தற்போது சிறுசிறு விளம்பர படங்கள் உள்பட பல படங்களில் கவுரவ ரோலில் வந்து கலக்கி வருகிறார்.
இவர், கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.120 கோடி வரியாக செலுத்தி, நாட்டின் முன்னணி வரி செலுத்துபவராக, அதாவது வரி செலுத்துவதிலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு ரூ.92 கோடி வரி செலுத்தி ஷாருக்கான் முதலிடத்தில் இருந்தார். கடந்தாண்டு நான்காம் இடத்தில் இருந்த அமிதாப் பச்சன், தற்போது ரூ.120 கோடி வரி செலுத்தியதன் மூலம் ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். சல்மான் கான் ரூ.75 கோடி வரி செலுத்தி உள்ளார்.
வயதானாலும், அமிதாப் பச்சன் தொடர்ந்து திரைத்துறையில் அமிதாப் பச்சன் ஆதிக்கம் செலுத்துகிறார் அதனால், என்றும் சூப்பர் ஸ்டார்தான் என வட இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.