வாரணாசி:

திமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன், பாஜக தலைவர் அமித் ஷா  வாரணாசியில் இன்று காலை திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

பிரதமர் மோடி  அவர் போட்டியிடும் உ.பி. மாநிலம் வாரணாசி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவர் வேட்புமனு தாக்கலின்போது பங்கேற்கும் வகையில்  பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாரணாசியில் குவிந்துள்ளனர்.

தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக கட்சி சார்பில், துணைமுதல்வர் ஓபிஎஸ், அதிமுக எம்.பி. தம்பித்துரை மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சென்றுள்ளனர்.

இன்று காலை சுமார்  8 மணியளவில் அமித்ஷா தலைமையில், அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காலை சிற்றுண்டியுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,  தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்ரே, சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ்சிங் பாதல் உள்பட பல கட்சி தலைவர்கள் வந்திருந்தனர். அவர்களுடன், மத்திய அமைச்சர்கள்  ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் உடனிருந்தனர். இவர்களுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.