அமித்ஷாவின் கூர்க்காலாந்து  எனக் குறிப்பிட்ட கடிதம் : மேற்கு வங்க அரசு கோபம்

Must read

டில்லி

மித்ஷா தனது கடிதத்தில் கூர்க்காலாந்து எனக் குறிப்பிட்டதால் மேற்கு வங்கத்தை  ஆளும் திருணாமுல் காங்கிரஸ் அரசு கடும் கோபம் அடைந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் பகுதியில் கூர்க்கா இனத்தைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் வசித்து வருகின்றனர்.  இவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு கூர்க்காலாந்து என்னும் தனி பிரதேசமாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்து  போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.   கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் மாதம் நடந்த இவர்களின் 104 நாட்கள் போராட்டத்தின் போது பல வன்முறை நிகழ்வுகள் நடந்துள்ளன.

தற்போது லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு இந்த கோரிக்கைகள் மேலும் வலுவடைந்து வருகின்றன.   இந்த பகுதியின் மக்களவை உறுப்பினர் ராஜு பிஸ்தா, “டில்லி  காவல்துறையில் பர்க்காக்களுக்குத் தனிப் பிரிவு அமைக்கக் கோரிக்கை விடுத்தாலும் அதை கண்டுக் கொள்வதில்லை   இதில் வடகிழக்கு மக்களுக்கு எதிரான இனப்பிரிவு பெரும் பங்கு வகிக்கிறது.  இதற்கு ஆவன செய்ய வேண்டும்” என மத்திய உள்துறை அமைச்சருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அமித்ஷா தனது பதில் கடிதத்தில், ”நான் கூர்க்காலாந்து மற்றும் லடாக் மக்களின் கோரிக்கைகளை கவனித்து வருகிறேன்.  விரைவில் இது குறித்ஹ்டு நல்ல முடிவை அறிவிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.   இந்த கடிதத்தில் உள்ள கூர்க்காலாந்து என்னும் சொல் மேற்கு வங்கத்தை ஆளும் திருணாமுல் கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திருணாமுல் காங்கிரசின் மூத்த தலைவரும் அமைச்சருமான கௌதம் தேப், “அவர் ஏன் கூர்க்காலாந்து என்னும் வார்த்தையைப் பயன்படுத்துகிறார்?  கூர்க்காலாந்து என்னும் பெயரில் நாட்டில் எந்தப் பகுதியும் கிடையாது.   காஷ்மீருக்கு அடுத்தபடியாக பாஜக மேற்கு வங்கத்தைப் பிரிக்க எண்ணுகிறது.  ஆனால் திருணாமுல் காங்கிரஸ் இருக்கும் வரை யாராலும் மாநிலத்தை உடைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு ராஜு பிஸ்தா, “கூர்க்காலாந்து பகுதி நிர்வாகக் குழு கடந்த 2011 ஆம்  ஆண்டு திருணாமுல் காங்கிரஸ், கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா மற்றும் அப்போதைய காங்கிரஸ் அரசு ஆகிய மூன்றும் இணைந்து தயாரித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  நான் அந்த குழுவின் விருப்பத்தை ஒட்டி எனது கோரிக்கையை விடுத்தேன்.

இந்தக் குழுவின் பெயரில் கூர்க்காலாந்து என உள்ளதால் அந்த குழு நிர்வகிக்கும் பகுதியை கூர்க்காலாந்து என அழைப்பதில் எவ்வித தவறும் கிடையாது.  இது குறித்து திருணாமுல் காங்கிரஸ் கடியின் வரலாற்றைத் தேடிப் பார்த்தால் இந்த விவரங்கள் தெரியவரும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

More articles

Latest article