டில்லி:

டுத்த ஆண்டு நடைபெற உள்ள  பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்க, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் காரணமாக பெங்களூருவில் முகாமிட்டு தேர்தல் பணியாற்றிய அமித்ஷா, அங்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், அதில் பாரதியஜனதா வெற்றி பெற ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்த அனைத்து மாநில கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படிடில்லியில் உள்ள பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று கூட்டம் தொடங்கியது. கூட்டத்தை அமித்ஷா தொடங்கி வைத்தார்.  ந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்றும்  அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்த ஆலோசனை  கூட்டத்தில், பாராளுமன்ற தேர்தல் பாஜ வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை ககள் மற்றும், பெண் நிர்வாகிகள் நியமனம் செய்வது, வாக்குப்பதிவு மையங்களுக்கு தேவையான நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெற்ற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு மிஷன் 2019 என்று பாரதிய ஜனதா கட்சி பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.