டெல்லி:

டெல்லியில் நேற்று நடைபெற்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முதல்வர் கெஜ்ரிவாலு டன் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்குகொண்ட, டெல்லி சுகாதார அமைச்சர் சத்யெந்தர் ஜெயின், கொரோனா அறிகுறி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவு (ஜூன் 15) இரவு  அவருக்க அதிக காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்ட தைத் தொடர்ந்து, டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள சத்யேந்திர  ஜெயின்,  நேற்று இரவு  காய்ச்சல் மற்றும் ஆக்ஸிஜன் அளவு திடீரென வீழ்ச்சியடைந்ததால் நான் ஆர்ஜிஎஸ்எஸ்ஹெச்சில் அனுமதிக்கப் பட்டுள்ளேன்.” என்று  பதிவிட்டு உள்ளார்.

டெல்லியில் கொரோனா தீவிரமாகி வரும் நிலையில்,  தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாகி பணியாற்றி வருவர் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்,  கடந்த சில நாட்களில் ஜெயின் பல கூட்டங்களில் கலந்து கொண்டார்  மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினார்-

ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நடைபெற்ற கூட்டத்திலும், நேற்று மத்திய அமைச்சர் அமித் ஷா அழைத்த கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டார். சந்திப்புக்குப் பிறகு ஜெயின் மற்றும் கெஜ்ரிவால் இருவரும் பிந்தைய காரில் பயணம் செய்தனர்.

இந்த நிலையில் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா அறிகுறி தெரிய வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.